உலர்ந்த பழ கொழுக்கட்டை
 

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி மாவு - 2 ஆழாக்கு, * முந்திரி, பாதாம் - 10, * திராட்சை - 20
* ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி, கடலைப்பருப்பு - கால் கப்
* தேங்காய் - அரை மூடி, சர்க்கரை - அரை கப், நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு நன்கு வேக வைத்து, நீரை வடித்து விட்டு, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம், திராட்சையைப் போட்டு பொரித்து,  பிறகு அதனுடன் துருவிய தேங்காய், மசித்த கடலைப்பருப்பு (கடலைப்பருப்பினை மசிக்காமல் முழுதாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம்), சர்க்கரை ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்த்து, கிளறி பூரணம் தயாரித்துக் கொள்ளவு வேண்டும்.

அடுப்பில் நீண்ட நேரம் வைத்து கிளறக் கூடாது. எல்லாம் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி விடவும். ச்சரிசி மாவில் உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி, வெண்ணெய் பக்குவத்திற்கு மாவினை பிசைந்து கொள்ளவும்.

மாவினை சிறிது எடுத்து, உருட்டி, ஒரு இலையில் அல்லது உள்ளங்கையில் வட்டமாக தட்டி, நடுவில் சிறிது பூரணத்தை வைத்து, கொழுக்கட்டைப் பிடிக்கவும். 

அனைத்து மாவினையும் கொழுக்கட்டைகளாக செய்த பிறகு, அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்த வேக வைத்து எடுக்கவும். சுவையான உலர்ந்த பழ கொழுக்கட்டை ரெடி.

 

 

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o முள்ளங்கி சப்பாத்தி
o உலர்ந்த பழ கொழுக்கட்டை
o பேரீட்சை பழ பாயசம்
o கடலைப்பருப்பு சௌ சௌ குருமா
o முருங்கை பொரிச்சக்குழம்பு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies