கடலைப்பருப்பு சௌ சௌ குருமா
 

தேவையான பொருட்கள்:

* கடலைப்பருப்பு - 100 கிராம், சௌசௌ - 1 (150 கிராம் அளவு), சின்ன வெங்காயம் - 100 கிராம்

* தேங்காய் 1/4 மூடி, சோம்பு - 1/4 தேக்கரண்டி' கசகசா - 1/4 தேக்கரண்டி, லவங்கம் - 4

* பட்டை - 2' பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

* மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்துமல்லித்தழை - சிறிதளவு

* எண்ணெய் - 2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, தக்காளி - 2

செய்முறை:

வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும், சௌசௌவை தோல் சீவி ஒரு அங்குலம் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும்.

முதலில் கடலைப்பருப்பை கழுவி வேகவைத்துக் கொண்டு, வெந்த பருப்பை லேசாக (பாதி பருப்பாக) மசித்து வைத்துக் கொள்ளவும். பிறகு  தேங்காயைத் துருவி சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் வெட்டிய சௌசௌ சேர்த்து நன்கு வதக்கவும். மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். காய் வெந்ததும் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்க்கவும்.

பிறகு வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து சோம்பு வாசனை போகுமளவு நன்றாக கொதிக்க விடவும். பாத்திரம் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லித்தழை சேர்க்கவும். வாசனையான கடலைப்பருப்பு சௌ சௌ குருமா ரெடி.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o முள்ளங்கி சப்பாத்தி
o உலர்ந்த பழ கொழுக்கட்டை
o பேரீட்சை பழ பாயசம்
o கடலைப்பருப்பு சௌ சௌ குருமா
o முருங்கை பொரிச்சக்குழம்பு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies