உலக மகளிர் தினத்தை அனைத்து
நாட்டிலும் மகளிர் அமைப்புகள் மார்ச் மாதம் 8ந் தேதி கொண்டாடுகின்றன. இதையொட்டி
மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் நடத்துகின்றன. உலக மகளிர் தினம்
உருவான வரலாறு மிகப் பெய போராட்டத்தால் உருவானது. மகளின் உமைகளை ஆணாதிக்க
சமுதாயத்திலிருந்து வென்றெடுத்த நாள் இது.
இரு நூற்றாண்டு முன்பு தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே
பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்து விட்டு வீடுகளில் முடங்கி கிடந்தனர்.
இவர்களில் பலருக்கு ஆரம்பக் கல்வி கூட கிடைக்கவில்லை. மருத்துவம் உள்ளிட்ட
உயர்கல்விகள் மகளிருக்கு எட்டாக்கனியாக இருந்தது.

1857ஆம் ஆண்டின் நடந்த
போனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்
நிலக்கச்சுரங்கள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் மகளிர் பலரும் பணி
அமர்த்தப்பட்டனர். ஒரு காலத்தில் மென்மையானவர்கள் என்று கருதப்பட்ட பெண்கள்
ஆண்களைவிட திறமையானவர்கள் என்பது அப்போது தெரிய வந்தது. ஆண்களுக்கு இணையாக எந்த
வேலையையும் பெண்கள் செய்ய முடியும் என்பதை பெண் சமுதாயம் புரிந்து கொண்டது.
ஆனால் பெண்களிடம் திறமையும் தகுதியும், திறனும் இருந்தபோதிலும் ஆண்களைவிட
பெண்களுக்கு குறைவாக ஊதியம் அந்தக் காலத்தில் தரப்பட்டது. இதனால் பெண்கள் மனம்
குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமை, வேலைகளும் கோரி பெண்கள் எழுப்பிய
குரலுக்கு அமெரிக்க நாட்டு அரசு மதிப்பளிக்கவில்லை.
இதனால் கிளர்ந்தெழுத்த அமெரிக்க பெண் தொழிலாளர்கள் 1857
ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி
போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றி பெண்கள்
இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள்
இப்போராட்டத்தை அரசு எந்திர ஆதரவுடன் அடக்கி ஒடுக்கினர்.
ஆனால் பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சமஉமை,
சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்காஹன் நகரில்
1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச்
சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.
இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே
செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். மார்ச் மாதம்
8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்றார். ஆனால் ஆணாதிக்கத்தின்
அழுத்தத்தில் இதை தொடர இயலாத நிலையால் இடைநின்று போனது.
சோவியத் ரஷ்யாவில் 1920 ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ் நகல் நடந்த பெண்களின்
போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார். அவர்தான்
உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம்
செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக்
கொண்டாடத் தொடங்கினர்.
மகளிருக்கு சமஉரிமை, சமஊதியம், சமசலுகை ஆகியவை இதுவரை முழுமையாக கிடைக்கவிட்டாலும்
அதைப் பெற மகளிர் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.