புதுடெல்லி, மார்ச். 11: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் கோரிக்கை எழுப்பப்பட்டடது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மோஹித் பாட்டீல் மாநிலங்களவையில் பேசியபோது, "சச்சின் தனது 16 வயது முதல் தொடர்ந்து நாட்டுக்காக விளையாடி வருகிறார்.
கராச்சியில் அவர் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே மிகச்சிறப்பாக விளையாடினார். அவரது திறமை அதீதமானது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி ஒன்றில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். உலகிலேயே இது வரை யாரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை.
நாட்டிற்கு பெருமை சேர்த்த ஒருவரை இந்த நாடு பெருமைப்படுத்த வேண்டும். நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.