சென்னை, மார்ச். 08: 3 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி அடையார் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் இன்று நடந்தது. கேப்டன் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தேர்வாளர் வி.பி.சந்திர சேகர், குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோனி, "நடைபெற இருக்கும் 3 வது போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம். கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவோம். 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக எதையும் சொல்ல முடியாது. 15, 20 நிமிடங்களில் ஆட்டத்தின் தன்மையே மாறிவிடும். எங்கள் அணியில் பந்தவீச்சில் பலவீனம் இல்லை" என்று கூறினார்.