மார்ச், 06: ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு 20/20 போட்டியில் 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 5 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா குறிப்பிட்ட 50 ஓவரில் 273 ரன் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் வாட்சன் 47, ஹட்டின் 53, ஒயிட் 54, ஹசி 56 ரன்னும் எடுத்தனர். பின் 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியினர் பேட்டிங் செய்தனர். மழை காரணமாக டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 45 ஓவரில் 266 ரன் இலக்கு நிரணயிக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து 43.2 ஓவரில் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.