ஒன்பது
வயதில் 'மங்கள நாயகி' படத்தில் அறிமுகமாகி இதுவரை 225 படங்களுக்கு மேல்
நடித்துள்ளார்.
பல
மொழிகளில் நடித்துள்ள ஷோபனா 2 முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீவிருதும் பெற்றுள்ளார்.


இதோ
நடனத்தை பற்றி நம்மிடம்...

என்
வாழ்க்கையில் எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. பொதுவா சினிமா நடிகைன்னா
காலம்பூராவும் அவ நடிகை தான்.
அதைத்
தாண்டி அவளோட திறமைகள் வெளியே தெரியறதில்லை. அதிர்ஷ்ட வசமா ஷோபனான்னு சொன்னா என்னோட
நடனம் ஞாபகத்துக்கு வர்றது சந்தோசமான விசயம்.
நான் உலகத்துல அதிகமா நேசிக்கிற விசயம் நடனம் தான். டான்ஸ்லயும், சினிமாவிலயும்
கலக்கின திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி எங்க அப்பாவோட சகோதரிகள்.
இன்னொரு
முக்கியமான காரணம் என் குரு சித்ரா விஸ்வேஸ்வரன். என்னோட எல்லா சாதனைகளும் அவங்களால
தான்.
எனக்கு
கிடைச்ச இந்த அனுபவங்கள் எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி 'கலார்ப்பனா'ங்கிற
நடனப் பள்ளியை ஆரம்பிச்சேன். சென்னையிலும், மஸ்கட்டிலும் இது செயல்படுது. இங்க
இருக்கிறவங்களை விட வெளிநாடுகளுக்கு போனவங்க நம்மளோட கலையை ரொம்பவே ரசிக்கிறாங்க.
நடித்ததில் பிடித்தது...
நான் நடிச்சதில எனக்கு ரொம்ப பிடிச்சது ரேவதி பிரமாதமா இயக்கின 'மித்ரு
மைஃபிரண்ட்' படம்தான். அந்த படம் தமிழ்நாட்டு சூழல்ல வாழற ஒரு பொண்ணு கல்யாணமாகி
வெளிநாட்டுக்கு போய் அங்கே ஒட்ட முடியாம, தனிமையான வாழ்க்கை வாழறதை ரொம்ப அழகா
சொல்லியிருக்கும்.
தனிமையில் வாழும் ஷோபனா திருமணத்தை பற்றி...
எனக்கு கல்யாணத்து மேலேயோ, ஆண்கள் மேலேயோ எந்த வெறுப்பும் கிடையாது. அதுக்கெல்லாம்
நேரமில்லைங்கிறது தான் சரியான காரணம். கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து நம்மளோட
அடையாளங்களை இழந்து சந்தோசங்களுக்கு நேரமில்லைங்கற பயமும் காரணமா இருக்கலாம்.
திருமண
வாழ்க்கையில் கிடைக்கிற சந்தோசத்தை விட அதிகமான சந்தோசத்தையும், மன அமைதியையும்,
நிம்மதியையும் டான்ஸ் எனக்கு கொடுக்குது.
எதிர்பார்ப்பு...
நடனத்தில்
இன்னும் நிறைய புது விசயங்கள் வரணும். பரதம் மூலமா மக்களுக்கு என்ன சொல்ல முடியும்னு
யோசிக்கிறேன்.
மேற்கத்திய நடனங்களுக்கு கொடுக்கிற முக்கியதுவத்தை இளைஞர்கள் நம்ம நாட்டு கலைகளுக்கு
கொடுத்தால் அதோட வளர்ச்சி ரொம்பவே நல்லாயிருக்கும்.
அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் நம்ம நாட்டு கலைகள் மேலும் வளர்ச்சியடையும்
என்பதில் எந்த ஐயமும் இல்லை.