வீடுகள், மனைகள் விலை 10 சதவீதம் அதிகரிப்பு
 

புதுடெல்லி, அக். 13: ரியல் எஸ்டேட் நிலவரத்தில் இப்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவில் சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவை சந்தித்திருந்தது. வீட்டு மனை, வீடு விலை 30 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

இதையடுத்து அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதாரம் படிப்படியாக சீரடைந்து வருகிறது. இந்நிலையில், மக்களின் வாங்கும் திறன் உயர்ந்துள்ளது. இப்போது, நிலைமை மீண்டும் மாற்றம் கண்டதால், ரியல் எஸ்டேட் விலை நிலவரம் ஏற்றம் கண்டுள்ளது. கடந் தாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

மும்பையில், மனை விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது; டில்லியில் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள் ளது. அப்பார்ட் மென்ட்களை பொருத்தமட்டில் மும்பை போன்ற பெரு நகரங்களில் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.
 
நண்பருக்கு அனுப்ப
 
 
o கட்டுமானத் தொழிலாளர் சங்கம் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம்
o வீடுகள், மனைகள் விலை 10 சதவீதம் அதிகரிப்பு
o சொத்து வாங்கல், சில சாதாரண பிரச்சினைகள்
o மனநிறைவுடன் வீடுகட்டி வாழ வழிசெய்கிறது அபிராமி கட்டுமான பணி நிறுவனம்
o தயக்கம் காட்டிய தனியார் நிறுவனங்கள் சாலை கட்டுமான பணியில் ஈடுபாடு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies