தயக்கம் காட்டிய தனியார் நிறுவனங்கள் சாலை கட்டுமான பணியில் ஈடுபாடு
 

சாலைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்ததை தொடர்ந்து இதுவரை தயக்கம் காட்டிய தனியார் நிறுவனங்கள் அனைத்தும், நெடுஞ்சாலை பணிகளை மேம்படுத்துவதற்கு முன்வந்துள்ளன. இதனை தொடர்ந்து முன்னனி நிறுவனங்களான  ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், ஜி.எம்.ஆர்.இன்ப்ராஸ்ட்ரக்சர்,லார்சன் அண்டு டூப்ரோ(எல்அண்டு டி), ஓமெக்ஸ் போன்ற நிறுவனங்கள் விலைப்புள்ளிகளை அனுப்ப உத்தேசித்துள்ளது.

இந்நிறுவனங்கள் அறுபது தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிற்காக ரு 70,000 கோடியை விலைப்புள்ளியாக நிர்ணயித்துள்ளன. இந்த திட்டத்தினை மேற்கொள்வதன் மூலமாக புதிய சாலைகளை 6500 கிலோமீட்டர் தூரத்திற்கு உருவாக்கலாம். இந்த திட்டத்திற்கான செலவை 10 சதவீதத்திலிருந்து 20 சத வீதமாக உயர்த்துவதற்கு மத்தியஅரசு தீர்மானித்துள்ளது. இந்த முடிவினை மத்திய அரசு மேற்கொண்டதன் காரணமாக இந்த திட்டத்திற்கான மதிப்பு இதுவரை உள்ள 70,000 கோடியிலிருந்து 80,000 கோடியாக அதிகமாகிவிடும்.

இதன் காரணமாக வங்கிகள் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த 70 சதவிகித கடனின் அளவானது அதிகமாகும். போதுமான நிதி கிடைப்பதன் காரணமாக இப்பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் பணிகளை சிறப்புடன் செய்துவரமுடியும். பீட்பேக்வென்சர்ஸ் நிறுவனத்தின்பொறியியல் பிரிவு தலைவரான பர்வேஷ் மனோச்சா இது பற்றி கூறியதாவது “வங்கிகள் பாரத ரிசர்வி வங்கியிடமிருந்து பெரும்குறுகியகால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) மற்றும் அவற்றிற்கான உபரி நிதியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைப்பதற்கான வட்டியின் விகித (ரிவர்ஸ்ரெப்போ ரேட்) போன்றவற்றை 1 ரூ குறைத்துள்ளதன் காரணமாக, வங்கிகளும் அவை வழங்கும் கடனிற்கான வட்டி விகிதத்தை 1ரூலிருந்து 2ரூ வரை குறைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளன”என்று கூறினார்.

சாலைகளைஅமைக்க தேவையான முக்கிய மூலப்பொருள்கள் விலை குறைந்துள்ளதன் காரணமாக உடனடியாக ஒப்பந்தங்களை வழங்குமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இப்பணியில் ஈடுபட நிறுவனங்கள் ஈடுபாடு காட்டி வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o கட்டுமானத் தொழிலாளர் சங்கம் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம்
o வீடுகள், மனைகள் விலை 10 சதவீதம் அதிகரிப்பு
o சொத்து வாங்கல், சில சாதாரண பிரச்சினைகள்
o மனநிறைவுடன் வீடுகட்டி வாழ வழிசெய்கிறது அபிராமி கட்டுமான பணி நிறுவனம்
o தயக்கம் காட்டிய தனியார் நிறுவனங்கள் சாலை கட்டுமான பணியில் ஈடுபாடு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies