சென்னை, செப். 22: கட்டட
வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க வகையில் சாதனை படைத்து வரும், சென்னை ரூபிங்ஸ்
நிறுவனம் 'சென்னை லேண்ட் மார்க் டாட் காம்' என்ற பெயரில் புதிய இணையதளத்தை
தொடங்கியுள்ளது.
இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து சென்னை லேண்ட் மார்க் நிறுவனத்தின் மேலாண்மை
இயக்குநர் வா. இராமலிங்கம் கூறியது:
வீடு, மனை, தோட்டம், தொழிற்சாலைக்கு நிலம் ஆகியவற்றை வாங்குவோர் தங்களுக்கு தேவையான
தகவல்களை இந்த இணையதளம் மூலம் பெறலாம். இதேபோல வீடு, மனை விற்பவர்களும் தங்களிடம்
விற்பனைக்கு உள்ள சொத்து குறித்த விவரங்களை இதில் வெளியிடலாம்.
நிலம் வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள், அரசின் நடைமுறை விதிகள்,
புதிய கட்டடங்கள் கட்டும் போது கடைபிடிக்க வேண்டிய சி.எம்.டி.ஏ. விதிகள், புதிய
கட்டுமானங்களின் வடிவமைப்புகள் மற்றும் அவற்றை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் என
அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இணையதள முகவரி:
www.chennailandmark.com