இந்திய கட்டுமானத்துறை
கடந்த 5 ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அரசு பொருளாதார கொள்கையை
தளர்த்தியதன் விளைவாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து
வருகின்றனர்.
இந்த கட்டுமான வேலை
சார்ந்த கட்டுமான வடிவமைப்பில் பல மென்பொருள் பயன்படுத்தப்படுகின்றன. அவை
(AUTOCIVIL, ADT, Staadpro, Autocad, ESR, GSR
)
பற்றி பார்ப்போம்.
ஆட்டோசிவில்
(AUTOCIVIL)
ஆட்டோ சிவில் எனப்படும்
மென்பொருள் ஒரு இடத்தின் பரப்பு எவ்வாறு உள்ளது என அறிய பயன்படுத்தப்படுகிறது. அதை
வைத்து அந்த இடம் பள்ளமாக உள்ளதா? அல்லது மேடாக உள்ளதா என தெரிந்து கொள்ளவும், மண்
வேலைகளின் மதிப்பீடு தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் சாலை
வேலைகளின் மதிப்பீடு. அதற்கான வரைபடம் தயார் செய்யவும் குடிநீர் விநியோகிக்கும் பைப்
(தண்ணீர் லைன்) செல்லும் இடங்களை அடையாளம் காணவும், பைப்பின் விட்டம் மற்றும் அதன்
கணத்தை நிர்ணயம் செய்யவும் பயன்படுகிறது.
ஆர்க்கிடெக்ட்
டெஸ்க்டாப் (ADT)
இந்த மென்பொருள் ஒரு
உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் ஆகும். ஒரு கட்டடத்தின் வரைபடம் மற்றும் அந்தக்
கட்டடத்தின் முன்புறம், பக்கம், உள்புறம் மற்றும் பின்புறம் ஆகியன எவ்வாறு இருக்க
வேண்டும்?
எந்த அளவுகளில் மற்றும்
எந்தப் பொருள் கொண்டு கட்ட வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு இது பயன்படுகிறது. இது
கட்டடக்கலை வல்லுநர்களால் மிகவும் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் ஆகும்.
ஸ்டாட்புரோ
(Staadpro)

இதுவும் ஒரு உலகத் தரம்
வாய்ந்த மென்பொருள் ஆகும். இதனை இந்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்
பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை பயன்படுத்தி வருகின்றன. தோற்ற அமைப்பைக் கொண்டு ஒரு
கட்டடத்தின் வடிவமைப்பு, அதன் தூண்களின் அளவு இதுதவிர அந்தந்த உத்திரங்களில் வரும்
சுவற்றின் சுமையை வைத்து அந்த உத்திரத்தில் வரும் சுமை கணக்கு எடுக்கப்படுகிறது-
அந்தக் கட்டடத்தின் கம்பி மற்றும் கான்கிரீட் கலவையின் தரமும் முறையே
நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சுமைகள் இரு வகையாக
பிரிக்கப்படுகிறது. அவைகள் முறையே அசையும் மற்றும் அசையா சுமைகள். இதனுடன் காற்றின்
வேகம் மற்றும் அதனுடைய தன்மை கட்டடத்தின் உயரம், அகலம் எல்லாம் கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில் நில அதிர்வுகள்
அதிக அளவில் ஏற்படுவதால் அதை தாங்கும் திறன் உடையதாக அமைக்க இந்த மென்பொருளில்
தகுந்த வசதி உள்ளது. இந்த மென்பொருள் கட்டடம் மற்றும் பாலங்களின் திறனை அறியவும்
அவைகளை வடிவமைக்கவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இந்த மென்பொருளில் பல
வெளிநாட்டு தரக்கட்டுபாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கும் வசதியும் உள்ளது.
ஆட்டோகேட்
(Autocad)

இம்மென்பொருள் பொதுவாக
கட்டட வடிவமைப்பாளர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வடிவமைத்த
கட்டடத்தின் ஆதாரங்களான அஸ்திவாரம், தூண்கள், உத்திரங்கள் மற்றும் தளங்களின் நீளம்,
அகலம் மற்றும் அதன் கனங்களை பொறியாளர்கள் அல்லாதவர்களும் புரிந்து கட்டடம்
கட்டுவதற்கு ஏதுவாக உள்ளது.
எந்தத் தூண் எத்தனை கம்பி,
கம்பியின் விட்டம் மற்றும் நீளம் ஆகியவைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்க
இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது-.
ESR/ GSR
இந்த மென்பொருள் முழுவதும்
நீர்தேக்க தொட்டிகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகள்
இருவகைப்படும். மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் மற்றும் தரையில் அமைக்கப்படும் நீர்த்
தேக்க தொட்டிகள்.
இவற்றில் நீரின் கொள்ளளவு
மற்றும் அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவை கொடுக்கப்பட வேண்டும். அவற்றில் கம்பியின்
திறன், கலவையின் திறன் ஆகியவையும் கொடுக்கப்பட வேண்டும். இந்த மென்பொருளால் வட்டம்,
சதுரம், நீளமான தொட்டிகள் என பல வடிவங்களில் நீர்த் தேக்கத் தொட்டிகளை வடிவமைக்கலாம்.
கேடஸ்ட்ஸ்
(Cadessts)
கட்டுமானப் பொருட்களின்
விலைகள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். கேடட்ஸ் மென்பொருள் கட்டுமானப் பொருள்களின்
விலைகளைக் கணக்கில் கொண்டு மதிப்பீடு தயாரிப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட மென்பொருள்
ஆகும். இந்த மென்பொருளில் மூலப் பொருட்களின் விலைப்பட்டியலைக் கொடுத்தால் அந்தப்
பொருளின் ஒரு யூனிட் தயாரிக்க ஆகும் விலையினை தெரிந்து கொள்ள உதவும்.
இவற்றில் மூலப்
பொருட்களின் விலை மற்றும் அதற்கு உண்டான தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர செலவுகளும்
அடங்கும். இவை கட்டடம், சாலைகள், பாலங்கள் மற்றும் இதர பணிகளுக்காகவும் பயன்படுகிறது.
இம்மென் பொருளைக் கொண்டு ஒரு கட்டுமானப் பணியின் திட்ட மதிப்பீடு செய்யப்படுகிறது-.
இது டெண்டர் கோரும் படிவம் தயாரிக்கவும், இத்துறையால் பெறப்பட்ட டெண்டரை
பரிசீலிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.