படுக்கையறையை அமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்
 

தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. சுட்டெரிக்கும் சூரியனும் இரவில் ஓய்வெடுத்துவிட்டு (பேச்சுக்கு) தான் பகலில் பிரகாசமாய் வருவான்.

அது போல் பகலெல்லாம் மாடாய் உழைக்கும் மனிதனின் களைப்பினை நீக்கவும், மறுநாளை அவன் மலர்ச்சியுடன் தொடங்கவும் தூக்கம் என்பது அவசியமாகிறது.

படுக்கையறைக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது-. மனிதனுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் படுக்கை அறையின் அமைப்பு சரியாக முறைப்படி இருக்க வேண்டாமா?

இதோ படுக்கையறையை அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்:

பொதுவாக படுக்கை அறைகள் தெற்கு, தென்மேற்கு, மேற்குப் பகுதியில் அமைக்கப்படல் வேண்டும். படுக்கை அறை அமைப்பதற்கு மிகவும் ஏற்ற இடம் தென்மேற்குப் பகுதியாகும். வட கிழக்கிலிருந்து உருவாகும் சக்திகள் பிரம்மஸ்தானத்தில் பிரதிபலித்து தென்மேற்குப் பகுதியை அடைகின்றன.

தென்மேற்குப் பகுதி உயரமாகவும், தென்மேற்கு கோணம் 90 டிகிரியாகவும் இருந்தால் சக்திநிலை அங்கு நிலைப்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் நைருத்தியில் இருக்கும் காற்றும் வட கிழக்கிலிருந்து வரும் சக்தியும் கலந்து தென்மேற்குப் பகுதி மற்றும் மேற்குப் பகுதியை பலமுள்ள பகுதியாக ஆக்குகின்றன.

பண்டை காலங்களில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் இல்லை. அக்காலத்தில் மேல்நிலை நீர்த்தொட்டி வாஸ்துப்படி தென்மேற்கில் அமைந்திருக்கும். தென்மேற்குப் பகுதியில் குடும்பத் தலைவனுக்கான படுக்கை அறை அமைய வேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் முறையாகும்.

தென் மேற்கு படுக்கையறை மேல்நிலை நீர்த்தொட்டிக்கு கீழே உள்ள பகுதியில் அமைந்திருப்பதால் இதமான சீதோஷ்ண நிலையில் இருக்கும். நாளெல்லாம் உழைத்து வரும் குடும்பத் தலைவன் இரவில் நன்றாக இளைப்பாறவும், உறங்கவும் தென்மேற்குப் படுக்கையறை ஏதுவாக இருக்கும்.

தென்கிழக்கு பகுதி படுக்கையறைக்கு உகந்ததல்ல. இப்பகுதியில் படுக்கையறையை அமைத்தால் தம்பதியருக்குள் அடிக்கடி தேவையில்லாமல் சச்சரவுகள் தோன்றும். தென்கிழக்குப் படுக்கை அறையில் அக்னி மூலைக்கான உஷ்ணமும், தென் மேற்கிலிருந்து வரும் சக்தியும் கலந்திருக்கும் நிலையில் பெண்களுக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் வரலாம்.

வடமேற்கு படுக்கையறை பெண்களுக்கும், விருந்தினர்களுக்கும் சிறந்த இடம். திருமண வயதிலுள்ள பெண்களுக்கு இந்தப் பகுதி படுக்கை அறையை உபயோகித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும். வடகிழக்கு பகுதி படுக்கையறைகளுக்கான பகுதியல்ல. இருந்தாலும் வடகிழக்குப் பகுதி படுக்கை அறையில் சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள் தங்குவதில் தவறில்லை.

* வாயில் வடகிழக்கில் அமைக்கப்படுவது முக்கியம்.

* கழிவறை மற்றும் குளியலறை தென்கிழக்கில் அல்லது வட மேற்கில் அமைக்கப்படலாம்.

* தென்மேற்கு பகுதியில் கனமான பெட்டி வைப்பது நல்லது.

* தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் துணிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான மரத்தால் செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் உயரத்தில் பொருட்கள் வைக்கும் அமைப்புகள் வைக்கப்படலாம்.

* தூங்கும் போது தலையை வடக்கு நோக்கி மட்டும் வைத்து படுக்க கூடாது.

* தெற்கில் தலைசாய்த்து தூங்குவது சரியான முறையாகும். நிம்மதியாக தூங்க இந்த நிலை உதவும்.

இம்முறையில் தலை வைத்துப்படுப்பதும் சரியான முறைதான். கிழக்கில் தலை வைத்துத் தூங்கினால் கல்வி ஞானம் உண்டாகும். கிழக்கு திசை கல்வி ஞான திசை என அழைக்கப்படுகிறது. படிக்கும் சிறுவர், சிறுமியர் கிழக்கில் தலைவைத்து படுப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

மேற்கில் தலை வைத்துப் படுப்பதும் சரியான முறையாகும். காலையில் எழுந்த உடன் இந்திர திசையாகிய கிழக்கில் முதலில் பார்ப்பார்கள். இது நல்ல பலன்களைக் கொடுக்கும். இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்களில் சிலருக்கு அடிக்கடி கனவுகள் வரும் என நம்பப்படுகிறது.

மிகப்பெரிய வீடுகளில் நான்கு மூலைப்பகுதிகளையும் தவிர வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மெற்குப் பகுதிகளிலும் படுக்கை அறைகள் அமைக்க ஏதுவாகும். வட மாநிலங்களில் வடக்குப் பகுதி படுக்கையறை தம்பதியருக்கு உகந்தது என்று கருதுகிறார்கள்.

கிழக்கு பகுதி படுக்கை அறைக்கு உகந்ததல்ல. இப்பகுதியில் உள்ள படுக்கையறையை உபயோகித்தால் சிலருக்கு மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.

தெற்குப் பகுதி படுக்கையறை தென்மேற்குப் பகுதிக்கு அடுத்து இருப்பதால் நல்ல பலனைக் கொடுக்கும். மேற்குப் பகுதி படுக்கை அறை தென்மேற்குப் பகுதிக்கு அடுத்து இருப்பதால் தம்பதிகள் சகல சவுபாக்கியங்களும் பெற்று மசிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

காந்த சக்தி மற்றும் இதர சக்திகளின் முழுப் பலனும் கிடைக்க வேண்டுமானால், தரையில் பாய் அல்லது ஜமுக்காளத்தை விரித்து படுத்திருப்பது மிகவும் நல்லது. இதனால் தான் முனிவர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தரையில் படுத்து உறங்குகிறார்கள்.

தரையில் தெற்கில் தலை வைத்து வடக்கில் கால் நீட்டி படுத்துறங்கும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா சக்தியும் பெற்று வாழ்கிறார்கள்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o கட்டுமானத் தொழிலாளர் சங்கம் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம்
o வீடுகள், மனைகள் விலை 10 சதவீதம் அதிகரிப்பு
o சொத்து வாங்கல், சில சாதாரண பிரச்சினைகள்
o மனநிறைவுடன் வீடுகட்டி வாழ வழிசெய்கிறது அபிராமி கட்டுமான பணி நிறுவனம்
o தயக்கம் காட்டிய தனியார் நிறுவனங்கள் சாலை கட்டுமான பணியில் ஈடுபாடு
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies