பா.ஜ.க.,வின் கட்சிக்கு பொதுசெயலர்கள் நியமிப்பு
 

புதுடெல்லி, மார்ச். 16: பா.ஜ.க.,வின் கட்சியின் பொதுசெயலர்களாக வசுந்த்ரா ராஜே (ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்), அனந்த்குமார், விஜய்கோயல் . அர்ஜூன் முண்டா (ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்) , ரவிஷங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், ஆகியோர் பொது செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொறுப்பு நியமனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிஷங்கர் பிரசாத் இளம் தலைமுறையினர் மற்றும் முதியவர்கள், அனுபவமிக்கவர்கள் என தேர்வு செய்யப்பட்டு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் கவர்னகள் பதவியில் இருந்தவர்கள் என பலருக்கு முக்கிய பொறுப்புகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இது பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றார். ராஜீவ் உறவினரான வருண்காந்திக்கு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ராகுலுக்கு எதிராக ஈடு கொடுக்க பா.ஜ., வுக்கு பயன்படுவார் என பா.ஜ.,வில் நம்பிக்கை நிலவுகிறது.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o கிராமங்களில் ஆசிரியர்கள் குறைவு: சோனியா காந்தி வேதனை
o முதல்வர் எடியூரப்பாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்
o ஜப்பான் உட்பட 3 நாடுகளுக்கு அடுத்த மாதம் பிரதமர் பயணம்
o பெட்ரோல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
o நாடு தழுவிய வேலை நிறுத்தம்: பல கோடி நஷ்டம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies