லண்டன், மார்ச். 11: கிழக்கு லண்டனில் ஷோர்டிட்ச் எனும் பகுதியில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றன. இந்த கிழக்கு லண்டன் செல்லும் பிரதான சாலைகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை கரும் புகை சூழ்ந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.