உலக கோடீஸ்வரர் பட்டியல்: முகேஷ் அம்பானி 4வது இடம்
 

நியூயார்க், மார்ச். 11: நியூயார்க்கில் உள்ள போர்பஸ் பத்திரிகை நிறுவனம் 2010 ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆயில் நிறுவனங்கள் நடத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வரும் முகேஷ் அம்பானி (29 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பு கொண்ட இவர் 4வது இடத்தை பிடித்துள்ளார். எஃகு உலகில் கொடிக்கட்டி பறக்கும் லட்சுமி மிட்டல் (28. 7 பில்லியன் டாலர்) சொத்து கொண்ட இவர் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

ரிலையன்ஸ் கம்னியூகேஷன், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் நடத்திவரும் அனில் அம்பானி கடும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் தனது சொத்தில் 76 சதவீதம் நஷ்டத்தை கண்டுள்ளார். எனவே இவர் பின்னுக்கு தள்ளப்பபட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக்சிகன் டெலிகாம் தைகூன் கார்லஸ் சிலிம் ஹெலு 53.5 பில்லியன் டாலர் சொத்து கொண்டவர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்சை பின்னுக்கு தள்ளி பலமிக்க மனிதராக உருவெடுத்துள்ளார்.

பில்கேட்ஸ் தற்போது 2வது இடத்தையும், வார்ரன் பப்பட் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக கோடீஸ்வரர் பட்டியில் தற்போது பாகிஸ்தானும், பின்லாந்தும் நுழைந்துள்ளது என்பது புதிய தகவல்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o 3வது முறையாக போட்டியிட ராஜபக்சேக்கு அனுமதி
o ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம்
o தொலைபேசியில் சில மாற்றங்கள்
o இணையதளத்தில் இருந்து "ஆக்கிரமிப்பு காஷ்மீர்" வார்த்தையை நீக்கியது சீனா
o சீனாவில், மீண்டும் வெள்ளம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies