பக்வா, மார்ச். 08: காஷ்மீர் மாநிலம் கோமா மாவட்டம் பக்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், திவிரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ரியாஸ் அகமது சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.