புதுடெல்லி, மார்ச். 08: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம் முலாயம் சிங் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இம்மசோதாவை நிறைவேற்றி 13 ஆண்டு கனவை நனவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும், சர்வதேச பெண்கள் தினமான இன்று, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.