பட்டுக்கோட்டை, மார்ச்.07 : ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலியை சேர்ந்தவர் மேஜார். இவரது மகன் மேகராஜ். இருவரும் தங்களுக்கு சொந்தமான 180 செம்மறி ஆடுகளை, ஊர் ஊராக ஓட்டிச்சென்று மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். தஞ்சை அருகே வேப்பங்குளத்தில் பட்டி அமைத்து, ஆடுகளை மேய்த்தனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 180 ஆடுகளையும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு ஓட்டிச்செல்லும் போது, படப்பைக்காடு ஏழுகண் பாலம் என்னுமிடத்தில் கோழிகளை ஏற்றிச்சென்ற லாரி, ஆடுகளின் மீது புகுந்தது. இதில் 56 ஆடுகள் இறந்தன. இதன் மதிப்பு ரூ.1.80 லட்சம். இதில் மேஜார், மேகராஜ் ஆகியோரும் காயமடைந்தனர். போலீசார் விசாரணை.