பிரதாப்கார், மார்ச். 04: உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்காரில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இன்று நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலின் வாசல் கதவு திடீரென இடிந்து விழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 20 பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.