திருநெல்வேலி: வைரஸ் காய்ச்சலில் இருந்து விரைவில் நிவாரணம் பெற, திருநெல்வேலியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து வாழும் கலை அமைப்பினர் வெளியிட்ட அறிக்கை:
தென் மாவட்டங்களில் தொடர் மழைக்கு பின் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கை, கால்களில் வலி வீக்கம் ஏற்படுகிறது. இதை இயற்கை முறையில் யோகாவின் மூலம் குணப்படுத்த முடியும்.
யோகா, பிராணயாமாக்கள், ஆசனங்கள், தியானங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
மேலும், நரம்பு மண்டலம் வலுப் பெறுவதால், இந்த காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இந்த பயிற்சிகளை வாழும் கலை அமைப்பினர் இலவசமாக வெள்ளிக்கிழமை (ஜன. 8) முதல் ஞாயிற்றுககிழமை (ஜன.10) வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கு அருகே உள்ள புஷ்பலதா மருத்துவமனை வளாகத்திலும், சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடத்துகிறது.
மேலும், தகவலுக்கு 99944- 38100, 94435- 07618, 94436- 14999 ஆகிய செல்போன்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.