சில குடும்பத்தில் பெண்கள் 12, 13 வயது ஆகியும் பூப்பெய்தாமல்
இருப்பார்கள். சில குடும்பச் சூழல், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் அதற்குக்
காரணமாக விளங்கலாம்.
ஆனால் 18, 19 வயது வரையும் பூப்பெய்தாமல் இருப்பது உண்மையில் மிகப் பெரும்
குறைபாடேயாகும். இதைப் போக்க வீட்டு வைத்தியத்தில் பல வழிமுறைகளை நமது பாட்டிமார்கள்
பின்பற்றி இருக்கிறார்கள்.
பூனைவணங்கி இலையின் சாறும் நல்லெண்ணெய்யும் 15 மில்லி வீதம் கலந்து மூன்று
நாட்கள், ஆறு வேளைகளுக்குக் கொடுத்து வந்தால் பூப்பெய்தாத பெண்கள் பருவமடைவர்
என்கிறார்கள்.
இதே போல் மாவிளங்கப் பட்டை, மிளகு, வெள்ளுள்ளி ஆகியவற்றைச்
சரிசம அளவில் எடுத்து நன்கு அரைத்து மூன்று கிராம் வீதம் காலை மாலை என மூன்று
நாட்கள் கொடுத்தாலும் விரைவில் பருவம் அடைவர்.

அமுக்கிராத் தூளும்
பொரித்த பெருங்காயமும் 5 கிராம் வீதம் எடுத்து உப்புக் கரைசலில் விட்டுத்
தந்தால் பெண் விரைவில் வயதுக்கு வருவாள்.
சில பாட்டிமார்கள் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலையும் கொட்டைப்பாக்கு அளவு
பச்சைக் கற்பூரமும் கலந்து அரைத்து, சுண்டைக்காய் அளவு காலை மாலை வீதம்
கொடுத்து வந்தால் விரைவில் பூப்பெய்தி விடுவாள் என்று வீட்டு வைத்திய நூல்களில்
காணப்படுகிறது.
தொடர்புக்கு....
டாக்டர் அக்பர் கவுஸர்
தெய்வீக மருத்துவம்,
370, மசூதி வீதி நியூ டவுன்,
வாணியம்பாடி, வேலூர் - 635752.
செல்: 098423 47868, 94432 25390