ஈழம் நேற்றும், இன்றும், 1967 ஜனவரி 12, சலனம் போன்ற தொடர்களின்
இயக்குனரும், சித்தி திரைக்கதை வசனகர்த்தாவுமான கவிதாபாரதியின் எழுத்து, இயக்கத்தில்
தயாராகும் தொடர் `வண்ணம்!' இது விரைவில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக
இருக்கிறது.காதல் என்பது மலர்க்கொத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஆணும், பெண்ணும்
சம்பந்தப்பட்ட உறவு மட்டுமல்ல...

அவர்களைச் சார்ந்த மனிதர்கள், குடும்பங்களின் கண்ணீரையும்,
வலியையும் உள்ளடக்கியது. காதலுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இடையில் சிக்கித்
தவிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதை தான் `வண்ணம்' என்கிறார் கவிதாபாரதி.``
அப்படியானால் இது காதல்கதையா?'' கேட்டால், "காதலின் மறுபக்கத்தைச்
சொல்லும் வலி நிறைந்த குடும்பக்கதை''என்கிறார். நண்பர் ஒருவர் மூலம் இந்தக் கதையைக்
கேட்ட `ஆனந்ததாண்டவம்' நடிகர் ரிஷி, முக்கிய கதாபாத்திரமொன்றில் விரும்பி
நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகை சரண்யா, அனில் ஆகியோர் முதன்மைக்
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.