கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்"தெற்கத்திப் பொண்ணுவில்
தற்போது நடித்து வருகிறார் சொர்ணமால்யா. ஜீ.டி.விக்காக நடித்த "யாதுமாகி நின்றாய்'
இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

இதையடுத்து தற்போது கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறார்
சொர்ணமால்யா. நாட்டியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இதற்காக கும்பகோணத்தில் உள்ள குரு
ஒருவரிடம் வாரத்தில் இரு நாள்கள் பயிற்சி எடுத்து வருகிறாராம்.
விரைவில் நாட்டிய மங்கையாகவும் உலா வரப்போகிறார்.