கோலி டாக்டர்னு பெயரெடுத்துடலாம்னு...
 

* டாக்டர். க்ளினிக் உள்ளே கோலி விளையாடிட்டு இருக்காரே?

போலி டாக்டர்னு பெயர் வந்திடுச்சாம். அதான் கோலி டாக்டர்னு பெயரெடுத்துடலாம்னு.....

*****

* டைரக்டர்: மேடம் இப்போ நீங்க போட்டிருக்கற எல்லா டிரஸ்ஸயையும் கழட்டிட்டு பாத்ரூம் போறீங்க!

நடிகை: ஓஹோ! படத்தோட ஓப்பனிங்ஸீனே இதுதானா?

*****

* பெரிய ஹீரோ இல்லை. படத்துக்கு நல்ல ஓப்பனிங் வேணும். என்ன பண்ணலாம்?

பெரிய ஹீரோயின் இருக்காங்களே? அவங்களை ஓப்பன் பண்ண வெச்சி ஓப்பனிங் ஸீன் எடுங்க.

*****

* போருக்கு கிளம்பும்போது மன்னன் எதிரே மகாராணியை வரவிட்டால் மங்களகரமாக இருக்கும் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது.

ஏன்?

மன்னர் மூடு மாறி அந்தப்புரத்திற்கு ராணியை அழைத்து சென்றுவிட்டார்.

*****

இது போன்று ஒரு சுயம்வரத்தை நான் கண்டதில்லை.

ஏன் மன்னா? இளவரசியுடன் யார் சண்டை போட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களோடு தான் திருமணமா?
ம்ஹும்... யார் இளவரசிக்கு அழகாக கொண்டை போட்டு விடுகிறார்களோ அவர்களுக்குத்தான்.

*****

* ஆறுமணி நேரமாக ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டிருக்கிறோம். மன்னர் வெளியே வரவே இல்லையே?

உள்ளே மகாராணி மன்னரை அடித்துக் கொண்டிருக்கிறார்.

*****


சென்னிமலை பி. செந்தில்குமார்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ கூட்ட‌ம்
o உயிரெழுத்து மனிதர்
o சார்! உங்க வீட்டு நாய்
o எறும்பு நினைச்சா
o உனக்கு என்னென்ன ஆட்டம் பிடிக்கும்?
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies