எதிர்கால சந்ததிக்கு நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு உண்டு: சல்மா
 

திருச்சி:   திருச்சியில் தமிழ்நாடு பண்பாட்டு கலாசாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட "கல்லூரி சங்கமம்' கிராமிய நடன நாட்டிய போட்டிகளைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:

 ""மேற்கத்திய நடனங்கள் அதிகமாக கல்லூரிகளில் இடம்பெறுகின்றன நம் கலைகளை விட்டுவிட்டு ஏன் மேற்கத்திய நடனங்களை நாம் தலையில் சுமக்க வேண்டும்? வெளியிலிருந்து வருபவைகள் அனைத்தும் சுமைகள்தான்.   நகர்ப்புறங்களில் இந்த நிலை இருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னமும் நாட்டுப்புறக் கலைகளே இடம்பெறுகின்றன. நாட்டுப்புறக் கலைகள் உயிர்ப்புடன் இருக்க கிராமப்புறங்களே முக்கிய காரணம்.

நமது முன்னோர் விட்டுச் சென்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு சரியான பொறுப்பாளிகள் கல்லூரி மாணவ, மாணவிகளே. அவர்கள்தான் எதிர்கால சந்ததியினர்.

அவர்களிடமுள்ள திறமைகளை, குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் தொடர்பான திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.  கல்லூரியில் என்எஸ்எஸ், என்சிசி பிரிவுகளில் சேர்ந்துப் பணியாற்றினால் கிடைக்கும் கூடுதல் மதிப்பெண்களைப்போல, நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபாடு கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் கூடுதல் மதிப்பெண் கிடைக்க முதல்வரையும், எம்பி கனிமொழியையும் சந்தித்து வலியுறுத்துவேன்'' என்றார் சல்மா.  

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o அழிவறியாத நாட்டுப்புறக் கலைகள்!
o திருப்பூர் கூடல் 2010 கலைவிழா
o செம்மொழி மாநாடு ஓவியப் போட்டி: விண்ணப்பிக்க பிப்.5 கடைசி நாள்
o கருங்கல்லில் நாதஸ்வரம் வடிவமைத்தவருக்குப் பாராட்டு!
o நாடகக் கலை அழியும் நிலை...
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies