கரூர்: கரூரில் மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இக் கண்காட்சி தொடர்ந்து திங்கள்கிழமையும் நடைபெறுகிறது.
மூலிகை தாவரங்களின் மருத்துவக் குணம், பயன்பாடு, அறிவியல் பெயர், பேரினப் பெயர் ஆகியன குறித்து கண்காட்சியில் விளக்கப்படும். மேலும், மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகளும் வாசிக்கப்படும்.
இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் சிறப்புரையாற்றுகிறார். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி நடைபெறும்.