கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம்
 

மனித இனத்தின் முதல் எதிரி கோபம்தான். அச்சம் கலந்த கோபம் பல இனங்களையே அழித்திருக்கிறது. கோபம் ஏவிவிடப்பட்ட ஏவுகணை போன்றது. ஒன்று அயலாரை அழிக்கும். அடக்க நினைத்தால் தன்னையே அழிக்கும்.

சுவீடன் நாட்டில் உள்ள `ஸ்ட்ரெஸ்' ஆய்வு மையம் இதை கண்டுபிடித்துள்ளது. 2 ஆயிரத்து 755 தொழிலாளர்களை 1992 முதல் 2003 வரை ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் எவ்வித இதய பாதிப்பும் இல்லாதவர்கள். ஆய்வு முடிவில் இவர்களில் 47 பேர் மாரடைப்பு மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சிலர் இறந்துவிட்டனர்.

இவர்களின் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருந்தது கோபம்தான். பொருளாதார காரணங்கள், வேலைப்பளு, பிடிவாதகுணம், உடலியல் பாதிப்புகள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் உள்பட பல்வேறு காரணங்களால் கோபம் உற்பத்தி ஆகிறது.

அதேபோல் அலுவலக ரீதியாகப் பார்த்தால் சில காரணங்களால் கோபம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சொல்லிக் கொள்ளாமல் சில காரியங்களில் ஈடுபடுவது, வெளியே சென்றுவிடுவது, மேலதிகாரி மற்றும் உடன் பணி செய்பவர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்காதது/ கொடுக்காதது போன்றவை குறிப்பிடத்தக்க காரணங்கள்.

இவ்வாறாக உருவாகும் கோபமும், அதிகப்படியான உணர்ச்சிகளும் இதயம் சம்பந்தமான பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவது எப்படி ?
o வீட்டில் தனியாக இருப்பவர்களுக்கு...
o பனிக்காலத்தில் உடலை எப்படி பாதுகாப்பது?
o மூலிகை நீரூற்று
o கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies