சமுதாயத்தில் இளைஞர்கள் மேம்பட இருக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்
 

* எப்போதுமே இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகத்தான் செயல்படுவார்கள் என்று சமுதாயம் நம்பிக்கை வைத்திருப்பதை தெரியப்படுத்த வேண்டும்.

* தேசிய நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவைச் சங்கப்பணிகள், தேசிய மாணவர் படை, சாரணர் படை, சுற்றுப்புறச்சூழல் குழு போன்றவற்றில் மாணவ, மாணவியரை உறுப்பினர்களாக்கி சமூகப்பணியில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

* ஆசிரியர்கள் கனிவுடனும், அக்கறையுடனும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும்போது வகுப்பறைகளில் கற்கும் சூழல் மேம்படும். மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும்.

* ஏற்றுக்கொண்ட விதிமுறைகளை மாணவ, மாணவியர் விரும்பி பின்பற்றும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். யாராக இருந்தாலும் எது சரியோ அதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

* குழுவிவாதம், குழுவாக கற்கும் மனப்பான்மையை வளர்த்தல், கேட்கும் ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் அனுபவமிக்க பலதுறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் போன்றவற்றின் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், மதித்து செயல்படுதல், இணைந்து செயல்படுதல் போன்ற ஆற்றல்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

* ஒருவரை ஒருவர் மதித்து பழகும் மனோபாவம், யாரையும் குறைத்து மதிப்பிடாமல் அல்லது மதிப்பீடு செய்யாமல் பழகும் சூழல் ஏற்படும்போது பய உணர்வு, பாதுகாப்பின்மை போன்றவை நிகழாது. அனைவரும் ஒரு வகையான பாதுகாப்பான உணர்வுடன் செயல்படும் சூழல் ஏற்படும். அப்போதுதான் ஒவ்வொருவரும் அவர்களது திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்த முடியும்.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவது எப்படி ?
o வீட்டில் தனியாக இருப்பவர்களுக்கு...
o பனிக்காலத்தில் உடலை எப்படி பாதுகாப்பது?
o மூலிகை நீரூற்று
o கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies