குட்டிப்பிரமிடுகள்
 

சென்ஷி

பழுப்பு வர்ணத்தில் இறக்கை கொண்டு
மிக அதிக வேகங்கொண்ட
தீங்கு செய்யாத
பறவையின் மேல் ஏறி பறந்து
பெரிய பல் கொண்ட
ராட்சதனைத் தோற்கடித்துத்
திரும்பி வரும்பொழுது
பிஸ்கட்களும் சாக்லேட்களும்
கூட நிறைய ஐஸ்கிரீமும்
கொண்டு வரவேண்டிய பணியில் இருக்கிறேன்.

கதைசொல்லி நுழைத்த
சாக்லேட்டின் பெயர்கள்
தொலைபேசுகையில்
உனக்கு எது வேணுமென்று
குழந்தையிடம் கேட்டுச் சொன்னது.

ரகசியக் கதைகளாய் பேசிப்பேசி
தீராது அதிகரிக்கும்
கனவுகளையும் காதலையும்
புகுத்தும் கதைகளில்
குழந்தை
பறவையின் சிறகைக் கேட்டிடக் கூடாதென
பயப்படுகிறாளொருத்தி.

நான் ஜெயிக்க வேண்டிய
ராட்சதன் பிள்ளைக்கு
அவன் என்னை ஜெயித்த கதையை
சொல்லிக் கொண்டிருப்பாள் இன்னொருத்தி.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o குட்டிப்பிரமிடுகள்
o கல்லூரித் தோழி
o காதல் ஞானி..!
o நாட்குறிப்பு
o கடவுள் வாழ்த்து
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies