பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்" வழங்கப்படும் மையங்களின் விபரம் அறிவிப்பு
 

சென்னை, பிப். 09: "பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும்" என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வெழுத, குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, கல்வி மாவட்ட வாரியாக குறிப்பிட்ட மையங்களில், "ஹால் டிக்கெட்" வழங்கப்படும்.

தேர்வர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தின் அடிப்படையில், அருகாமையில் உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள், "ஹால் டிக்கெட்டை" பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிழை இருந்தால், தேர்வுத்துறை கூடுதல் செயலரை உடனே நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தொடர்பு கொள்ள வேண்டும். முதல் நாள் தேர்வின்போது, வீட்டு முகவரியிட்ட 30 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய உறையை, தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூரப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கல்வி மாவட்ட வாரியாக, "ஹால் டிக்கெட்" வழங்கப்படும் மையங்கள் விவரம்:
செங்கல்பட்டு-செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளி,
காஞ்சிபுரம்-ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி,
பொன்னேரி-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருவள்ளூர்-டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி,
சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய கல்வி மாவட்டம்-மதரசா மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை ஆகிய இடங்களில், "ஹால் டிக்கெட்"வழங்கப்படுகிறது.
 
நண்பருக்கு அனுப்ப
 
 
o 28 ஆயிரம் பேர் பி.இ., கலந்தாய்வில் பங்கு கொள்ளவில்‌லை
o வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க சிறப்பு சலுகை நீட்டிப்பு
o என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் இன்று துவக்கம்
o இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இடமுண்டு: கலைஞர்
o பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies